தலைப்புச் செய்திகள்

வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்: இரண்டு சிறுவர்கள் பலி

தெஹிவளையிலுள்ள வீடு ஒன்றின் மீது இன்று (11) அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெஹிவளை – கவ்டான பகுதியிலுள்ள சங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடு மீது நடத்த இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த அச்சிறுவர்களின் தந்தை மற்றும் அவர்களது இரு சகோதரர்கள் சிகிச்சைக்காகக் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே 10 வயதுடைய சிறுவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 14 வயதுடைய அந்த சிறுவனின் சகோதரனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சிறுவர்களின் 52 வயதுடைய தந்தை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகின்றனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களுக்கு இடையிலான மோதலுடன், இந்த கைக்குண்டுத் தாக்குதலுக்குத் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.