
இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஒருவர், தனது இறுதிச் சடங்கிற்காகத் தயார் செய்யப்பட்டிருந்த அதே வீட்டிற்கு உயிருடன் வந்து சேர்ந்தார்.
குறித்த நபர் மரணித்து விட்டார் என, பொலிஸார் அறிவித்திருந்த நிலையில், கல்கமுவ – கொஹோபங்குளம கிராமத்தில், ஆச்சரியமான இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கொஹோபங்குளம பகுதியைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், வாரியபொல சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் காவலில் இருந்தபோது இறந்துவிட்டதாக நன்னேரியா பொலிஸார் அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த குடும்ப உறுப்பினர்களும் கிராம மக்களும் உடனடியாக இறுதிச் சடங்கு ஏற்பாடுகளைத் தொடங்கினர். கிராமம் முழுவதும் பதாகைகள் வைக்கப்பட்டன, பந்தல்கள் அமைக்கப்பட்டன, மேலும் தகனத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில், கீர்த்திசேன திடீரெனத் தனது வீட்டிற்கு உயிருடன் வந்து, அவருக்காகத் தயார் செய்யப்பட்டிருந்த இறுதிச் சடங்கு இல்லத்திற்குள் நுழைந்தார். அவரது எதிர்பாராத வருகை கிராமம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கீர்த்திசேனசிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, வீட்டுக்கு வரும் வரையில் – இவ்வாறான சம்பவம் நடந்துளை்ளமை அவருக்குத் தெரியாது.



