
முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என அடையாளம் காணப்பட்ட ஷிரான் பாசிக் என்பவரை 72 மணி நேர தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளையைச் சேர்ந்த 48 வயதான சந்தேக நபர், துபாயில் கைது செய்யப்பட்டு நேற்று (14) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் தெஹிவ, மிரிஹான பொலிஸ் நிலையங்களால் விசாரிக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்; களுத்துறை மற்றும் தெஹிவளை பொலிஸாருடன் தொடர்புடைய துப்பாக்கிகளை வைத்திருத்தல்; பிலியந்தல பொலிஸாரின் கீழ் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருத்தல்; மற்றும் கொழும்பு குற்றப் பிரிவால் விசாரிக்கப்படும் தீங்கு விளைவிக்கும் சட்டவிரோதக் கூட்டம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்கிறார்.
குற்றவாளி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மூலம் சட்டவிரோத சொத்துக்களைக் குவித்துள்ளதாக பொலிஸார் சந்தேகின்றனர். மேலும் இந்த சொத்துக்களைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.



