
ஹொரானயிலுள்ள அரச வங்கியொன்றின் கிளையில் இருந்து ரூ. 30.5 மில்லியன் பணம் கொள்ளையடிக்கப்பட்டமை தொடர்பாக, அந்த வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் ஒரு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (03) பிற்பகல் 2:55 மணியளவில், ஒரு வங்கி ஊழியர் வங்கியின் பின்புற நுழைவாயில் வழியாக இரண்டு பணப் பைகளை எடுத்துச் சென்றபோது, அங்கு வந்த ஒரு நபர், பணப் பைகளை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டுத் தப்பிச் சென்றார்.
திருடப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ. 30.5 மில்லியன் ஆகும். சம்பந்தப்பட்ட வங்கியின் தானியங்கி பண இயந்திரங்களில் (ATM) வைப்பு செய்வதற்காக பணத்தை கொண்டு சென்ற போதே, இவ்வாறு பணம் கொள்ளையிடப்பட்டது.


