
தொட்டலங்கவில் வசிக்கும் பெண்ணொருவரின் இரண்டாது கணவரான போதைப்பொருள் கடத்தல்காரர் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் வாங்கியதாகக் கூறப்படும் சுமார் ரூ. 30 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவிடம் பொலிஸ் மா அதிபர் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, தொட்டலங்கவில் 1.30 பேர்ச் மற்றும் 0.75 பேர்ச் அளவிலான இரண்டு நிலத்துண்டுகளையும், ஒரு சொகுசு வீட்டையும் வாங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
இன்று (05) முதல் ஏழு நாட்களுக்குள் இந்த உத்தரவை அமல்படுத்துமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


