தலைப்புச் செய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு நாலரை மாதங்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம்

ள்நாட்டு இறைவரித் திணைக்களம், 2026ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஒரு டிரில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வரி வருமானத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், அரச வருவாயை அதிகரிப்பதற்கும் திணைக்களம் மேற்கொண்டு வரும் பல்வேறு வரி நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் வரி அறவீட்டுத் திட்டங்களின் பயனாக இந்த இலக்கை எட்ட முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், வரி இணக்கப்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும், வினைத்திறனான வரி நிர்வாகமும் இந்த வருவாய் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

ஒரு ட்ரில்லியன் ரூபாய் என்பது – ஒரு லட்சம் கோடி ரூபாயாகும்.