
ரகசியமாக ரத்மலான விமான நிலையத்திற்கு அருகிலுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் – சட்டவிரோத தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு நிலையமொன்றை பொலிஸார் கைப்பற்றினர்.
தொலைத்தொடர்பு அதிகாரிகளின் உதவியுடன் கல்கிஸை பிரிவு – குற்றப் புலனாய்வுப் திணைக்களம் நடத்திய இந்தச் சோதனையின்போது, மாலைதீவு நாட்டவர் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையம், அத்திட்டிய பகுதியில் ஒரு பயண நிறுவனத்தின் பெயரில் இயங்கி வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

செயற்கைக்கோள் தொலைபேசிகள், செயற்கைக்கோள் டிஷ்கள், கணினிகள், ஒரு ஸ்டார்லிங்க் சாதனங்கள் மற்றும் பிற ஒலிபரப்பு உபகரணங்கள் உட்பட சுமார் 05 கோடி ரூபாய் மதிப்புள்ள சாதனங்களை இதன்போது பொலிஸார் கைப்பற்றினர்.
இந்த நிலையம், ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திடமிருந்து தரவுகளைப் பயன்படுத்தி, செயற்கைக்கோள் மூலம் தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பதிவிறக்கம் செய்து, இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு – சட்டவிரோதமாக தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளை மறு ஒளி/ஒளிபரப்ப செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


