எக்னலிகொட – எல்.ரீ.ரீ.ஈ உரையாடல் ஒலிப்பதிவு; ராணுவத்தினர் கசிய விட்டதாக சந்தேகம்

🕔 March 6, 2016

Doubt - 01காணாமல் போனதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகோடவுக்கும் எல்.ரீ.ரீ.ஈயினருக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் உரையாடலின் ஒலிப்பதிவு, இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியுள்ளமை தொடர்பாக ராணுவத்தினர் வாயடைத்துப் போயுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ராணுவத்தினரிடம் இருந்த இந்த குரல் பதிவு, எவ்வாறு இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது என்பது தொடர்பில் பாரியளவில் கேள்விகள் எழுந்துள்ளன.

பிரதீப் எக்னலிகோடவுக்கும் எல்.ரீ.ரீ.ஈ.யினருக்குமிடையில் நடந்த உரையாடலின் ஒலிப்பதிவு தம்மிடம் உள்ளதாக கடந்த வருடம் ராணுவத்தினர் தெரிவித்திருந்தனர். இதன் பின்னர், காணாமல் போனதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் எக்னலிகொட தொடர்பில் நடைபெற்ற கடைசி வழக்கு விசாரணையின் போது, இந்த ஒலிப்பதிவு நாடா ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டது.

ஆயினும்,  நீதிமறத்தின் வசம் குறித்த ஒலிப்பதிவு இருக்கின்ற நிலையில், அதனை சில இணையத்தளங்கள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ராணுவத்தினரே இந்த ஒலிப்பதிவினை இணையத்தளங்களுக்கு கசிய விட்டிருக்கலாம் என்று, பாதுகாப்புத்துறை சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் ராணுவ பேச்சாளர் பிறிகேடியர்  ஜயனத் ஜயவீரவை, மேற்படி ஆங்கில ஊடகம் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த விவகாரம் நீதிமன்றின் முன்னாள் உள்ளதால் இதுபற்றி எதுவும் கூறமுடியாது என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்