கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கிச் சூடு; வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக சம்பவம்

🕔 March 5, 2016

Shot - 02ர்ப்பிணிப் பெண் ஒருவர் மீது வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் குறித்த பெண் காயமடைந்த நிலையில், தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு இடம்பெற்றபோது, மேற்படி பெண்ணுடன் வயோதிப பெண் ஒருவரும், ஒரு பிள்ளையும் இருந்துள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதி ஒருவரைப் பார்வையிடுவதற்காக, சம்பந்தப்பட்ட பெண் வந்தபோதே, இச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்