புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிக்கை, ஏப்ரல் இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிப்பு
உத்தேச அரசியலமைப்பு தொடர்பாக பொதுமக்களின் பிரேரணைகள் மற்றும் கருத்துகள் பெறப்பட்ட பின்னர், புதிய அரசியலமைப்பு தொடர்பான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை, கொழும்பு மாவட்ட மக்கள் உத்தேச அரசியலமைப்பு தொடர்பான யோசனைகளைச் சமர்ப்பிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவதாக அரசியலமைப்புக் குறித்து மக்கள் கருத்துக்களை அறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்தார்.
எனவே, உத்தேச அரசியலமைப்பு தொடர்பான யோசனைகளை சமர்ப்பிப்பதற்கான இரண்டாவது சந்தர்ப்பமொன்றினை கொழும்பு மாவட்ட மக்களுக்கு வழங்குவதாக லால் விஜயநாயக்க கூறினார்.