தலைப்புச் செய்திகள்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது

ரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் – ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டுள்ளார்.

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அவரைக் கைது செய்துள்ளது.

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பைத் தடுக்கத் தவறியதாக சாலே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.

இதேவேளை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமை்சர் பிள்ளையானின் உதவியாராக இருந்த ஆசாத் மௌலானா வெளிநாடொன்றில் இருந்து ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டிகளிலும் ஈஸ்டர் தாக்குதலுடன் சுரேஸ் சாலே தொடர்புபட்டிருந்தார் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.