இந்தோனேசிய கடலுக்கு அடியில் பாரிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

🕔 March 2, 2016

Sumatara - 091ந்தோனேசியாவின் சுமத்திரா பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 என்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலுக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்க மையம் இருந்தது. இதுவரை சேதம் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் இல்லை.

இதனையடுத்து மேற்கு சுமத்திரா உட்பட அதன் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக கடல் ஆழமில்லாத பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்கள் கடும் சேதம் விளைவிக்கக் கூடியவை, ஆனால் இந்த நிலநடுக்கம் நிலப்பகுதியிலிருந்து 662 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளதால், பாதிப்பு குறைவாகவே ஏற்படலாம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான தெரிவித்துள்ளது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்