
முப்பது மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள 03 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன், பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் – விசேட அதிரடிப்படையினரின் நடவடிக்கையின் போது, நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படும் பாதாள உலகக் கும்பல் தலைவர்களான வெலிஓயா பிரியந்த மற்றும் எஸ்.எஃப் ஜெகத் ஆகியோரின் நெருங்கிய கூட்டாளியாக அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ரிட்ஜ்வே பிளேஸில் உள்ள தற்காலிக வீதித் தடையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

வெள்ளவத்தையில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் 3 கிலோ 16 கிராம் போதைப்பொருள், ஒரு கையடக்கத் தொலைபேசி மற்றும் இரண்டு எடைபார்க்கும் மின்னணு இயந்திரம் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக – பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


