
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாளை (26) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை, தற்போது மீண்டும் தொடரவுள்ளது.
இந்த பணிப்புறக்கணிப்பில் ஒரு பகுதியாக வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளிடம் – மருந்துகளை வெளியில் உள்ள மருந்தகங்களில் (External Pharmacies) வாங்குமாறு பரிந்துரைத்தல், தேவையான வைத்தியப் பரிசோதனைகளை வெளியில் உள்ள தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளுமாறு நோயாளிகளுக்குப் அறிவுறுத்துதல் போன்ற செயல்பாடுகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.

அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து – இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.



