தலைப்புச் செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது

யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையத்தில் அவர் இன்று ஆஜரானமையை அடுத்து அவரை பொலிஸார் கைது செய்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், அவருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

பொலிஸாரின் கடமைக்கு இடைஞ்சல் ஏற்படித்திய வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியிருந்தார்.