
– ஜனாதிபதி ஊடகப் பிரிவு –
2026 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (05) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இணைந்துகொண்டார்.
நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு – செலவுத் திட்டத்தை, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.


