
குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களுக்கு 25 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 01 முதல் செப்டம்பர் 30 வரையிலான 06 மாத காலப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகள் மூலம், இந்த அபராதங்கள் வசூலிக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரசபை கூறியுள்ளது.
இந்த காலகட்டத்தில், நாடு முழுவதும் மொத்தம் 306 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இவற்றில் எண்ணிக்கையிலான நடவடிக்கைகள் கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன.

எதிர்காலத்தில் இதுபோன்ற சோதனைகள் தடையின்றி தொடர்ந்து நடத்தப்படும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.


