
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 06 பேர் – பெண் மாணவர்கள் என்பது குறிப்பிடத்க்கது.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பகிடிவதை சம்பவத்திற்கு ஆளானதாகக் கூறப்படும் ஒரு மாணவி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அண்மையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடந்த பகிடிவதை சம்பவம் தொடர்பிலும், அதன் பின்னர் நடந்த தாக்குதல் தொடர்பிலும் பலர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டமையும் நினைவுகொள்ளத்தக்கது.



