தலைப்புச் செய்திகள்

லஞ்சக் குற்றச்சாட்டில் 17 பொலிஸார் உட்பட 07 மாதங்களில் 49 பேர் கைது

ஞ்சம் பெற்றார்கள் எனும் குற்றசாட்டுகளில் – கடந்த 07 மாதங்களில் மாத்திரம் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் தமது அலுவலகங்களுக்கு, சுமார் 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

குறித்த முறைப்பாடுகளுக்கு அமைய 721 இடங்களில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 17 பொலிஸாரும் அடங்குகின்றனர் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தவிர – நீதி அமைச்சு, சுகாதார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் மாவட்ட செயலகங்களிலிருந்தும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, லஞ்சம் மற்றம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.