முஸ்லிம் மாகாண கோரிக்கையை கைவிட முடியாது: பஷீர் சேகுதாவூத்

🕔 February 22, 2016
Basheer - 0123னியான முஸ்லிம் மாகாணம் என்ற கொள்கையை முஸ்லிம்கள் கைவிடமுடியாது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கருத்தமர்வின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளில் இந்த விடயமும் உள்ளடக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களை பொறுத்தவரையில் சுயநிர்ணய உரிமை என்ற விடயத்தை அவர்கள் கைவிடத் தயாரில்லை. இதனைப் போன்று வடக்கு கிழக்கு இணைப்பையும் கைவிட அவர்கள் தயாரில்லை.

எனவே, முஸ்லிம்களுக்கு சுயநிர்ணயத்தையும், தாயகத்தையும் தருவதற்கு முஸ்லிம் மாகாணம் அமையவேண்டும். இதனை கைவிடமுடியாது என பஷீர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியான முஸ்லிம் அடையாளம் என்பது, சில நாடாளுமன்ற ஆசனங்களை பெறுவதையோ அமைச்சரவையில் இடத்தை பெறுவதையோ குறிக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம்களுக்கு தனியான மாகாணம் தேவை என்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப்பும் உறுதிப்படுத்தியிருந்தாக பஷீர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்