தலைப்புச் செய்திகள்

காதி நீதவான் மற்றும் எழுதுவினைஞர் கைது

கதுருவெல காதி நீதிமன்ற நீதவானையும், எழுதுவினைஞர் ஒருவரையும் இன்று (04) லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

01 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக இந்த கைதுகள் நடந்துள்ளன.

கதுருவெல காதி நீதவான் நீதிமன்றில் விவாகரத்து வழக்கில் தொடர்புடைய ஒரு பெண்ணுக்கு சாதகமான முடிவை வழங்குவதற்காக, மேற்படி நபர்கள் – லஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கதுருவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.