தலைப்புச் செய்திகள்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்ரகுப்தா கைது

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்ரகுப்தாவை, இன்று (26) காலை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்தனர்.

வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழுவுக்கு வந்திருந்த அவரிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் – அதிகாரிகள் கைது செய்தனர்.

சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த வழக்கில் சந்திரகுப்தா 2024ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த விடயம் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லாவுடனும் தொடர்புடையதாகும்.

தரமற்ற ஹியுமன் இம்யூனோகுளோபுலின் மருந்தை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்ரகுப்தா மற்றும் 05 பேரை மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் 2024ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு – விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே ஜனக சந்திரகுப்தா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.