
இஸ்ரேல் – பீர் ஷேவாவில் உள்ள சொரோகா வைத்தியசாலையை தாக்கி சேதப்படுத்தியமைக்கு ஈரான் ‘பெரும் விலை கொடுக்க நேரிடும்’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
“இன்று (19) காலை, ஈரானின் பயங்கரவாத சர்வாதிகாரிகள் பீர் ஷேவாவில் உள்ள சொரோகா வைத்தியசாலை மீதும், நாட்டின் மையத்தில் உள்ள பொதுமக்கள் மீதும் ஏவுகணைகளை வீசினர்” என்று நெதன்யாகு X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“தெஹ்ரானில் உள்ள கொடுங்கோலர்களை – நாங்கள் பெரும் விலை கொடுக்கச் செய்வோம்” எனவும் அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஏவுகணைகள் நேற்று இரவு – இஸ்ரேலின் மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலில் உள்ள நான்கு இடங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தின. இதில் சொரோகா மருத்துவமனையும் அடங்கும்.
இதேவேளை, வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள இஸ்ரேலிய ராணுவ கட்டளை மற்றும் உளவுத்துறை தளம் இன்று காலை ஏவுகணைத் தாக்குதலின் முக்கிய இலக்காக இருந்தது என்று, ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தித்தளமான IRNA தெரிவித்துள்ளது.



