
ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடியாக, இஸ்ரேல் முழுவதும் ஈரான் நேற்றிரவு நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று ஈரானின் சிரேஷ்ட ராணுவ அதிகாரிகள் கூறியதாக அல் ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
“இந்த மோதல் நேற்றிரவு வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் முடிவடையாது. ஈரானின் தாக்குதல்கள் தொடரும், மேலும் இந்த நடவடிக்கை ஆக்கிரமிப்பாளர்களுக்கு மிகவும் வேதனையாகவும் வருந்தத்தக்கதாகவும் இருக்கும்” என்று பெயர் குறிப்பிடப்படாத ஒரு அதிகாரி கூறியதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதோடு, பொதுமக்கள் குடியிருப்பு மீதும் இஸ்ரேலை் தாக்கியுள்ளது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 320 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஈரானின் உயர் மட்ட ராணுவத் தளபதிகள் மற்றும் 06 அணு விஞ்ஞானிகளை நேற்று இஸ்ரேல் தாக்குதல் நடத்திக் கொன்றது.
இதனையடுத்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி – இஸ்ரேல் “கடுமையான தண்டனையை எதிர்பார்க்க வேண்டும்” என்று எச்சரித்தார்.
இந்த நிலையில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ராணுவ நடவடிக்கை தேவைப்படும் வரை தொடரும் என்று கூறியிருந்தார்.



