தலைப்புச் செய்திகள்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ தொடர்ந்தும் விளக்க மறியலில்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை, ஜூன் 4ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் – ஹல்லோலுவ தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ, அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஜூன் 02ஆம் திகதி (இன்று) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

தேசிய லொத்தர் சபையின் பதில் பணிப்பாளராக இருந்த காலத்தில், 470,000 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கணினி மற்றும் கைத் தொலைபேசிகளை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், அவர் மே 02ஆம் திகதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் துசித ஹல்லொலுவ பணியாற்றியிருந்தார்.

தொடர்பான செய்தி: முன்னாள் ஜனாதிபதி ரணிலின் மக்கள் தொடர்பு அதிகாரி பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு: ஆவணமும் பறித்துச் செல்லப்பட்டது