தலைப்புச் செய்திகள்

நிந்தவூர் அப்துல் கபூர் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்

– றிசாத் ஏ. காதர் –

நிந்தவூரைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் அப்துல் கபூர், இன்று (16) கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அப்துல் கபூர் ஆதம்பாவா – அலியார் அவ்வா உம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரான அப்துல் கபூர், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டதுடன் பட்டமேற்கல்வி டிப்ளோமாவை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார்.

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்று ஆங்கில ஆசிரியராக வெளியேறிய அப்துல் கபூர், அதிபர் சேவை பரீட்சிசையிலும் சித்தியடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினகரன், டெய்லி நியுஸ் ஆகிய பத்திரிகைகளின் பிராந்திய ஊடகவியலாளராக இவர் செயற்படுவதுடன், அரச அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டமாணி பட்டப்படிபபை நிறைவு செய்துள்ள அப்துல் கபூர், நாம் ஊடகர் பேரவையின ஸ்தாபகச் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.