தலைப்புச் செய்திகள்

ஹெரோயின் கடத்திய மூவருக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் கடத்திய குற்றங்களுக்காக மூன்று நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பேருவளை கடற்பரப்பில் பல நாள் மீன்பிடி படகில் 17 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டு சென்றபோது குற்றவாளிகள் 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த ஐந்து பிரதிவாதிகளை விடுதலை செய்து – கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே உத்தரவிட்டார்.