தலைப்புச் செய்திகள்

159 ஆளுந்தரப்பு எம்.பிகளில், 03 பேர் மட்டுமே 100 வீதம் வருகை

வரவு – செலவுத் திட்ட நாடாளுமன்ற அமர்வுகளில் 159 ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் 03 பேர் மட்டுமே 100 வீத வருகையைப் பதிவு செய்துள்ளனர்.

2025 பெப்ரவரி 17 முதல் மார்ச் 21 வரை, வரவு செலவுத் திட்டதுக்கான 27 அமர்வுகள் நடைபெற்றன.

இந்த அமர்வுகளில் மொத்தமாக 10 நாடாளுமன்ற உறுப்பினர்களே, அனைத்து அமர்வுகளிலும் கலந்து கொண்டனர்.

அவர்களில், பிரதமர் ஹரினி அமரசூரிய, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களாவர்.

ஏனைய 07 பேரும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த – டி.வி. சானக, தயாசிறி ஜயசேகர, திலித் ஜயவீர, கயந்த கருணாதிலக, ஹேஷா விதானகே, கே. சுஜித் சஞ்சய பெரேரா, மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோராவர்.