தலைப்புச் செய்திகள்

நாமல் ராஜபக்ஷ சிஐடிக்கு வந்தார்

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (சிஐடி) வந்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ தனது சட்டத்தரணி பதவியை மோசடியாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக, கடந்த வாரம் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு சிஐடி தெரிவித்திருந்தது.

‘லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான பொதுமக்கள் அதிகாரம்’ (Citizens’ Power Against Bribery and Corruption) எனும் அமைப்பு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, சமீபத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தனது பாட்டி – டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்கு, தான் சிஐடிக்கு அழைக்கப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார் என, அததெரண செய்தி வெளியிட்டுள்ளது.