
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய பயணத்தில் மின்சாரம், எரிசக்தி, சுகாதாரம், பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் – இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 06 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்த இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், சம்பூர் சூரிய சக்தி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, தம்புள்ளையில் வெப்பநிலை கட்டுப்பாட்டிட திறப்பு விழா மற்றும் நாடு முழுவதும் உள்ள 5,000 மத நிறுவனங்களில் சூரிய மின் உற்பத்திக் கூரைகள் திறப்பு விழாவிற்கான பதாதைகளை – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதிஅனுர குமார திசாநாயக்கவும் வீடியோ காட்சி மூலம் திறந்து வைத்தனர்.
நேற்று (04) இரவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்திருந்தார்.



