தலைப்புச் செய்திகள்

அரச ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட சம்பளம்: ஏப்ரல் 01 முதல் வழங்க அமைச்சரவை அனுமதி

அரச ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட சம்பள அளவுகளின்படி, ஏப்ரல் 01ஆம்த திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில், சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2025 வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள திருத்தம் தொடர்பாக – நிதி, திட்ட அமுலாக்கம் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூர் மன்ற அமைச்சருடன் சேர்ந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

அதன்படி, பின்வரும் விடயங்களுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது,

  • அரச சேவையின் சம்பள திருத்தங்கள் தொடர்பாக அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், உள்ளூராட் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை உத்தரவுகளை வெளியிட பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட் மன்றங்கள் அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் அளித்தல்.
  • அரச நிறுவனங்கள், சட்டப்பூர்வ அதிகார சபைகள் மற்றும் முழுமையாக அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை உத்தரவுகளை வெளியிட நிதி, திட்ட அமுலாக்கம் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளருக்கு அதிகாரமளித்தல்.

இதனால், அரச ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட சம்பள விகிதங்களின் அடிப்படையில் சம்பளம் வழங்குவதற்கான அனுமதி ஏப்ரல் 1, 2025 முதல் செயல்படுத்தப்படும்.