
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வீட்டில் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும், 214 வைன் மது போத்தல்களும் கண்டெடுக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் – இரண்டு கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டன எனவும் அவர் கூறினார்.
“இந்த தொலைபேசிகளிலிருந்து முக்கியமான தகவல்களைக் கண்டறிய முடியும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தேசபந்து தென்னகோனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், சில காலம் தலைமறைவாகியிருந்த அவர் – இன்று காலை மாத்தறை நீதவான் நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.
தொடர்பான பதிவு



