தலைப்புச் செய்திகள்

18 கிலோவுக்கும் அதிக கேரள கஞ்சா, சாய்ந்தமருது வீட்டில் சிக்கியது

 – தில்சாத் பர்வீஸ் –

பெருமளவு கஞ்சாவுடன் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (10) திங்கட்கிழமை காலை நபரொருவரை கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்தனர்.

கடந்த 04ஆம் திகதி கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது – கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது, 33 வயது மதிக்கத்தக்க ஒருவரின் வீட்டினை சோதனை செய்த வேளையில், கட்டிலின் கீழ் பகுதியில் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் இருந்து  18 கிலோகிராம் 169 கிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் சான்றுப் பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையும் பாருங்கள்