தலைப்புச் செய்திகள்

மஹிந்த மகன் யோஷித ராஜபக்ஷ கைது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ பெலியத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர்ட – இவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு 05ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர் குற்றங்களைச் செய்துள்ளார் என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதால், அவருக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்துடன்.

சட்ட மா அதிபரின் பணிப்பின் பிரகாரம் இந்தக் கைது நடைபெற்றதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.