தலைப்புச் செய்திகள்

யாழ்ப்பாணத்தவரை விடுவிப்பதற்கு லஞ்சம் பெற்ற அதிகாரி கைது

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் வெலிசர தடுப்பு மையத்தில் பணியாற்றும் அதிகாரியொருவர் 05 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று திங்கள்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் – மேற்படி நபரை கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் வெலிசர தடுப்பு மையத்தில் பணிபுரியும் மேற்படி அதிகாரி, ஒரு கைதியை விடுவிக்கும் பொருட்டு – லஞ்சம் கோரியதாகக் கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்தின் நல்லூர் வடக்கைச் சேர்ந்த கைதி, செல்லுபடியாகும் வீசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்ததற்காக – வெலிசர தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிப்பதற்காகவே லஞ்சம் கோரப்பட்டது.