தலைப்புச் செய்திகள்

இஸ்ரேலுக்கு 08 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்கள்: அமெரிக்க ஜனாதிபதி பைடன் பதவி விலகுவதற்கு முன்னர் வழங்க திட்டம்

இஸ்ரேலுக்கு 08 பில்லியன் டொலர்பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

துப்பாக்கிகள், ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை உள்ளடக்கிய இந்த விற்பனைக்கு, அந்த நாட்டின் நாடாளுமன்றம் (காங்கிரஸ்) மற்றும் செனட் குழுக்களின் அங்கிகாரம் தேவைப்படும்.

ஜனாதிபதி ஜோ பைடன் பதவி விலகுவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காஸா போரின் போது கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையின் காரணமாக, இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை இடைநிறுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

இஸ்ரேலுக்கு 20 பில்லியன் டொலர் பெறுமதியான போர் விமானங்கள் மற்றும் பிற ராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய – அமெரிக்கா அங்கிகாரம் வழஙகியது.

இது குறித்து இந்த ஆயுத விற்பனை தொடர்பில் நன்கு அறிந்த வட்டாரமொன்று பிபிசியுடன் பேசுகையில்; “சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு இணங்க, தமது குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு உரிமை உண்டு. ஈரான் மற்றும் அதன் பினாமி அமைப்புகளின் ஆக்கிரமிப்பைத் தடுக்க இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

இஸ்ரேலின் பாதுகாப்புக்கு தேவையான திறன்களை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்.

இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவை பைடன் அடிக்கடி விவரித்தார்.

உலகிலேயே மிகவும் தொழில்நுட்ப ரீதியாக அதிநவீன ராணுவத்தை உருவாக்க உதவியதுடன், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் அமெரிக்கா மிகப் பெரியது” எனத் தெரிவித்தது.

2019 மற்றும் 2023 க்கு இடையில் – அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேல் 69 வீதமான – முக்கிய மரபுசார் ஆயுதங்களை இஸ்ரேல் இறக்குமதி செய்துள்ளது.