
– பாறுக் ஷிஹான் –
இறக்காமம் பிரதேசத்தில்ட ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றிரவு கைதான இளைஞனிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வகிறது.
இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் – ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞரொருவரை நேற்று சனிக்கிழமை (4) இரவு – கல்முன விசேட அதிரடிப் படையினர் கைது செய்தனர்.
கல்முனை விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, இறக்காமம் பகுதியை சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் இருந்து 25 கிராம் 440 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டது. இதனையடுத்து சந்தேக நபர் – சட்ட நடவடிக்கைக்காக, இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதோடு, சான்றுப் பொருட்களும் கையளிக்கப்பட்டன.
கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ். ரத்நாயக்க தலைமையில் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தொடர்பானது: பழக்கத்தை விட்டாலும், பாதிப்பிலிருந்து மீள்வது கடினம் || ஐஸ் பாவனை || Puthithu



