
இலங்கைக்குள் பெருமளவு போதைப்பொருளைக் கடத்த முயற்சித்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தென்னாபிரிக்க கடவுச்சீட்டை வைத்திருந்த பெண், கானாவிலிருந்து கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இன்று (29) அதிகாலை 1.50 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துள்ளார்.
இதன்போது 41 வயதுடைய பெண்ணிடம் இருந்து 4,068 கிராம் கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த போதைப்பொருளின் மதிப்பு சுமார் 142 மில்லியன் (14.2 கோடி) ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.



