
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து அரசியல்வாதிகள் பணம் பெற்றுள்ளதாக, அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவ்வாறு வழங்கப்பட்ட நிதியை மீளப் பெற முடியுமா என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
நடாளுமன்றத்தின் 1978 ஆம் ஆண்டுடின் சட்ட எண் 07 இன் மூலம் இணைக்கப்பட்ட ஜனாதிபதி நிதியமானது, 237,120 ரூபாயை ஆரம்ப நன்கொடைத் தொகையாகக் கொண்டு, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின்படி, அபிவிருத்தி லொத்தர் சபை மற்றும் பொது நன்கொடைகள், கணக்காய்வாளர் நாயகத்தால் வருடாந்தம் தணிக்கை செய்யப்படும் கணக்குகளிலிருந்து ஜனாதிபதி நிதியத்துக்கு பிரதான வருமானம் கிடைக்கின்றது.
ஜனாதிபதி நிதியத்தின் பிரதான நோக்கங்களில் – வறுமை ஒழிப்பு, கல்வி, மத முன்னேற்றம், தேசிய சேவையை அங்கீகரிப்பது மற்றும் ஜனாதிபயும் – ஜனாதிபதி நிதியமும் பொருத்தமானது எனக் கருதும், பிற பொது நன்மைகள் ஆகியவை அடங்கும்.
மேலும், இந்த நிதியானது மருத்துவ உதவி, வறுமை ஒழிப்புத் திட்டங்கள், மாணவர்களுக்கான உதவித்தொகை மற்றும் மத மற்றும் கலாச்சார முயற்சிகளுக்கான மானியங்கள் போன்ற பல செயல்பாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இது இவ்வாறிருக்க, ஜனாதிபதி நியத்தினால் வழங்கப்ப்ட நிதியை திரும்பப் பெறுவதற்கான தெளிவான வழிமுறையைகள் சட்டத்தில் இல்லை.
இருந்தபோதிலும், ஜனாதிபதி நிதியம் தொடர்பில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் நிதியின் கடுமையான மேற்பார்வையை பொதுமக்கள் கோரியுள்ளனர். மேலும், அதன் வளங்களை அதனுடைய நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி: டெய்லி மிரர்
தொடர்பான செய்தி: வறிய மக்களுக்கு ஆதரவளிக்கும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து, மில்லியன் கணக்கான பணத்தைப் பெற்றுக் கொண்ட அமைச்சர்கள், எம்.பிகளின் பெயர்கள் அம்பலம்



