
கொள்கலன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு மகசீன்களை – மீதொட்டமுல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த – கொள்கலனொன்றில் இருந்து கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்காக இந்த ஆயுதம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளுக்காக கைத்துப்பாக்கி மற்றும் மகசீன்கள் வெல்லம்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.



