கொழுப்பு நிறைந்த உணவுகளால், மாரடைப்பு ஏற்படுவதில்லை: புதிய ஆய்வில் உறுதி

🕔 February 14, 2016

Heart - 08975கொழுப்பு நிறைந்த உணவுகளும், முட்டைகளும் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

திடீரென ஏற்படும் மாரடைப்புக்கும், கொழுப்பு சத்து நிறைந்த உணவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

கிழக்கு பின்லாந்து பல்கலைக் கழகத்தில் உள்ள இதய நோய் பாதிப்புக்கான காரணி குறித்த ஆய்வு 1984 முதல் 1989 வரை நடத்தப்பட்டது.

இதய நோய் பாதிப்பு இல்லாத, மிகுந்த ஆரோக் கியமான 42 முதல் 60 வயது நிரம்பிய 1,032 ஆண்களின் தினசரி உணவு பழக்க வழக்கத்தை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் தினசரி கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளும், ஒரு முட்டையும் வழங்கப்பட்டது. 21 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் கொழுப்பு சத்து நிறைந்த உணவை சாப்பிடுவதாலோ, ஒவ்வொரு நாளும் ஒரு முட் டையை சாப்பிடுவதாலோ மாரடைப்பு ஏற்படுவதில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

230 ஆண் களுக்கு கொழுப்பு சத்தை பாதிக்கும் (APOE4 ஃபீனோடைப்) வளர்சிதை மாற்றங்களால் மட்டுமே மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் கொழுப்பு உணவுக்கும், வளர்சிதை மாற்றங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்