
ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் தேசிய அமைப்பாளர் பதவியை ராஜிநாமா செய்வதாக ஹிருணிகா பிரேமச்சந்திர சமர்ப்பித்த கடிதத்தை கட்சித் தலைமை ஏற்க மறுத்துள்ளது.
ஹிருணிகாவின் ராஜிநாமாவை கட்சி ஏற்க மறுத்துள்ளதாகவும், அவர் தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் பிரிவின் தேசிய அமைப்பாளராக இருப்பார் என்றும், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
“ஐக்கிய பெண்கள் சக்தியின் அமைப்பாளர் பதவியை தொடருமாறு நாங்கள் ஹிருணிகாவை கோரியுள்ளோம், அவர் அதற்குச் சம்மதித்துள்ளார் என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதித் தேர்த்லில் பின்னடைந்தமைக்கு கட்சியில் எவரும் – அமைப்பாளர்கள் மீது குற்றம் சுமத்தவில்லை எனவும் மத்தும பண்டார மேலும் குறிப்பிட்டார்.
இருந்தபோதிலும், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் தோல்வியடைந்ததற்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் – அமைப்பாளர்களைக் குற்றம் சாட்டியதாக ஹிருணிகா பிரேமச்சந்திர கூறியிருந்தார். “கட்சித் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் கட்சியின் சிரேஷ்டமானவர்களை விடவும் அதிக சக்தி வாய்ந்தவர்கள் வேறு எவரும் கட்சியில் இருக்க முடியாது” என்று ஹிருணிகா கூறியிருந்தார்.



