
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி – மீண்டும் தனது சட்டத் தொழிலுக்குத் திரும்பியுள்ளார்.
அலி சப்ரி தனது சட்டத் தொழிலைச் சேர்ந்த குழுவுடன் காணப்படும் படமொன்றை சமூக ஊடகத்தில் பகிர்ந்து – ‘நான் சொந்த இடத்திற்குத் திரும்புவது மகிழ்ச்சியாக இருக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய உறுப்பினரான அலி சப்ரி, தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் நுழைந்தார்.
அவர் கோட்டாபய ராஜபக்ஷமற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரின் முன்னாள் அரசாங்கங்களின் கீழ் – நீதி மற்றும் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார்.



