
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (15) நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 2,849 மையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பரீட்சையில் 320,879 மாணவர்கள் தோற்றவுள்ளனர் என்று, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது
இதேவேளை, இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக நாளை காலை பரீட்சை நிலையங்களுக்கு அருகில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.



