தலைப்புச் செய்திகள்

தமிழரசுக் கட்சி – சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு: சுமந்திரன் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்ற போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரா.சாணக்கியன், த. கலையரசன், எஸ். குகதாசன், எம்.ஏ. சுமந்திரன், சட்டத்தரணி கே.வி. தவராசா, கே. சிவஞானம், செயலாளர் ப. சத்தியலிங்கம் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப. அரியநேந்திரன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.