தலைப்புச் செய்திகள்

நாடாளுமன்ற ஆசனங்களை இழந்த ஹரின், மனுஷவுக்கு புதிய பதவிகள்

முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் – ஜனாதிபதியின் ஆலோசகர்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விளையாட்டு, காணி மற்றும் சுற்றுலா விவகாரங்களுக்கான ஆலோசகராக ஹரீன் பெர்னாண்டோவும், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆலோசகராக மனுஷ நாணயக்காரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 41(1) பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார இருவரையும் கட்சி உறுப்புரிமையிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி நீக்கியமையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து, மேற்படி இருவரும் தங்கள் நாடாளுமன்ற உறுப்புரிமைகளை இழந்தர்கள்.