தலைப்புச் செய்திகள்

ஓய்வுபெற்ற தபால்காரர்களை பணிக்கு அமர்த்த அனுமதி

ய்வுபெற்ற தபால்காரர்களை – தேர்தல் பணிகளுக்கு நியமிக்க அனுமதிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு தபால் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க ஓய்வுபெற்ற தபால்காரர்கள் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், தேர்தல் நடவக்கைகளின் போது அவர்களின் சேவையை வழங்குவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.