
ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய மொத்தம் 99 புகார்கள் நேற்று (05) மாலை 05.00 மணி வரை கிடைத்துள்ளதாக – தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவற்றில், தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 68 முறைப்பாடுகளும், தேர்தல் முறைப்பாடுகளுக்கான மாவட்ட முகாத்துவ நிலையங்களுக்கு 31 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
இதுவரை பெறப்பட்ட அனைத்து முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



