தலைப்புச் செய்திகள்

கஞ்சிப்பான இம்ரான், ரொடும்பே அமில ரஷ்யாவில் கைது

‘கஞ்சிபானி இம்ரான்’ மற்றும் அமில சேபால ரத்நாயக்க என்றழைக்கப்படும் ‘ரொடும்பே அமில’ என அழைக்கப்படும் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், இந்த விடயம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) இந்த விடயத்தை உறுதிப்படுத்துமாறு இன்டர்போலிடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

‘கஞ்சிபனி இம்ரான்’ மற்றும் ‘ரொடும்பே அமில’ ஆகியோர் முன்னர் துபாயில் போதைப்பொருள் கடத்தல்காரர் ‘மாகந்துரே மதுஷ்’ உடன் கைது செய்யப்பட்டனர். பின்னர் இலங்கையில் பொலிஸ் அதிகாரிகளுக்கும் மற்றொரு சந்தேகத்திற்குரிய குற்றக் கும்பலுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது – மாகந்துரே மதுஷ் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ‘கஞ்சிபனி இம்ரான்’ மற்றும் ‘ரொடும்பே அமில’ ஆகிய இருவரும், நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட பின்னர் மீண்டும் நாட்டை விட்டு தப்பிச் சென்றனர்.

இது இவ்வாறிருக்க கிளப் வசந்த கொலையில் பயன்படுத்தப்பட்ட துப்பாகி ரவைகளில் ‘கேபிஐ’ எனும் எழுத்துக்கள் இருந்ததாகவும், அது கஞ்சிபானை இம்ரான் என்பதன் சுருக்கமாக இருக்கலாம் எனவும் கூறப்படுவதால், அந்தக் கொலையில் கஞ்சிபானை இம்ரானுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், ரொடும்பே அமிலவும் கொலைக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதுருகிரியவில் ‘கிளப் வசந்த’ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான ‘லொகு பட்டி’ என அழைக்கப்படும் சுஜீவ ருவன்குமார பெலாரஸ் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று (01) அதிகாலை தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், லொகு பட்டியின் சகோதரர் சஞ்சீவ புஷ்பகுமார டி சில்வா மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் மெர்வின் ஜானாவின் மனைவியும் பெலாரஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதன்படி, ‘லொகு பட்டி’யை விரைவில் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை பொலிஸார் ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் அனைவரும் பல்வேறு குற்றச் சாட்டுக்களுடன் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.