
நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் – பாரதிய ஜனதா கட்சி தனது தாமரைச் சின்னத்தில் நேரடியாகப் போட்டியிட்டு, ஒரு தொகுதியைக் கூட 05 மாநிலங்களில் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் 23 தொகுதிகளில் பா.ஜ.கட்சி தனது தாமரைச் சின்னத்தில் நேரடியாகப் போட்டியிட்டிருந்த போதிலும், எந்தவொரு தொகுதியிலும் அந்தக் கட்சி வெற்றி பெறவில்லை.
அதேபோன்று பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு தொகுதிகளிலும் பா.ஜ.க – தாமரைச் சின்னத்தில் களமிறங்கியிருந்தது.
மேலும், மிசோரம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தலா ஒவ்வொரு தொகுதிகளில் தாமரைச் சின்னத்தில் பா.ஜ.க போட்டியிட்டது.
ஆனாலும், இந்த மாநிலங்களில் எந்தவொரு தொகுதியிலும் பா.ஜ.க – தாமரைச் சின்னத்தில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



